அத்தியாயம் 4 உடையாள்
குதிரையில்
இருந்து இறங்கிய வேலு நாச்சியார், முத்து வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் இரத்தத்தில்
குளித்து, உயிரற்று கிடப்பதைப் பார்த்தார்.
வேலு நாச்சியாரின் உள்ளம் குமுறிக்
கொண்டிருந்தது. வஞ்சகமாக மறைந்திருந்து கொன்ற ஆங்கிலேயர்களைப் பழிவாங்க வேண்டும்,
இப்பொழுதே, வாளேந்திப் போரிட்டு அழித்திட வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது.
ஆனாலும் இறுதிச் சடங்கினைச் செய்ய வேண்டுமல்லவா?


.jpg)

